×

ஜோதிமணி இறுதி கட்ட பிரசாரம்



கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கரூர், ஏப்.17: கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று இறுதிகட்டபிரசாரம் மேற்கொண்டார், காலையில்கிருஷ்ணராயபுரம் கடைவீதி தொடங்கி புலியூர், உப்பிடமங்கலம், தரகம்பட்டி, ஈசநத்தம், பள்ளபட்டி ஷாநகர், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், தென்னிலை, பரமத்தி கடைவீதி, நொய்யல், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, வெங்கமேடு பகுதியில் பிரசாரம் செய்து தாந்தோணிமலையில் பிரசாரத்தை நிறைவு செய்தார். தாந்தோணிமலையில் நடந்த பிரசாரத்தில் திமுக துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கொள்கைபரப்பு செயலாளர்  எம்பி திருச்சி சிவா, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



Tags : Jothimani ,stage campaign ,
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு