×

முருக்கம்பள்ளம்  திரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரத மகோற்சவ விழா

கிருஷ்ணகிரி, ஏப்.17:  முருக்கம்பள்ளம் திரௌபதி அம்மன் கோயிலில் 45ம் ஆண்டு மகாபாரத மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் முருக்கம்பள்ளம் திரௌபதி அம்மன் கோயிலில் 45ம் ஆண்டு மகாபாரத மகோற்சவ விழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (15ம் தேதி) முதல் தினமும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை 18 நாட்கள் தர்மபுரி மாவட்டம் ஜோகிப்பட்டி ஆண்டி பாகவதர், காடியாம்பட்டி பின்னனி பாடகர் செல்வம் ஆகியோரது மகாபாரத சொற்பொழிவும், வருகிற 19ம் தேதி முதல் தொடர்ந்து 13 நாட்கள் தினசரி இரவு 9 மணியளவில் தர்மபுரி மாவட்டம் தண்டுகாரனஹள்ளி தியாகி சுப்பிரமணிய சிவா நாடக கலை குழுவினரின் மகாபாரத தெருக்கூத்து நாடகங்கள் நடைபெறவுள்ளது.  இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முருக்கம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, காத்தாடிகுப்பம், வெண்ணம்பள்ளி, ஜோடுகொத்தூர், மாதனகுப்பம், மேல்அக்ரஹாரம், மல்லிநாயனப்பள்ளி ஆகிய கிராமத்தை சேர்ந்த தர்மகர்த்தாக்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Mahabharata Maha Chorus ,Murugampallam  Draupadi Amman Temple ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...