×

கரூர் எல்ஆர்ஜி நகரில் சிதிலமடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றியமைக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தல்

கரூர், ஏப்.16: கரூர் எல்ஆர்ஜி நகரில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிதிலமடைந்த நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் வடிவேல் நகர்ப்பகுதியின் உட்புறம் எல்ஆர்ஜி நகர் உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், தனித்தனி குடியிருப்புகள் இந்த பகுதியில் அதிகளவு உள்ளன. எல்ஆர்ஜி நகரின் நுழைவு வாயில் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த இந்த டிரான்ஸ்பார்மர் கடந்த ஒரு ஆண்டுகளாக, கம்பத்தின் சிமெண்ட் துகள்கள் அனைத்தும் சிதிலடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனை மாற்றித் தர வேண்டும் என இந்த பகுதியினர் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கடந்த ஒரு ஆண்டாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்ஆர்ஜி நகர்ப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள இந்த மின்கம்பத்தினை உடனடியாக மாற்றித் தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்  மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur ,LRG City ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது