×

நெய்வேலியில் ஆவணமின்றி எடுத்து வந்த ₹1.60 லட்சம் பறிமுதல்

பண்ருட்டி, மார்ச் 28: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் பண்ருட்டி, நெய்வேலி தொகுதியில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நெய்வேலி பறக்கும்படை குழு ரங்கதாஸ் தலைமையிலான அதிகாரிகள் நெய்வேலி மத்திய பேருந்துநிலையம் அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியே வந்த வடக்குமேலூரை சேர்ந்த சவுந்தரபாண்டியன் என்பவர் காரில் இருந்த ரூ.80 ஆயிரம் இருந்தது. ஆனால் இதற்கு ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மெயின் பஜாரில் பைக்கில் வந்த பாலசுப்ரமணியம் என்பவரிடம் ரூ.83,360 உரிய ஆவணமின்றி இருந்ததால் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த இரு தொகைகளும் பண்ருட்டி சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Neyveli ,
× RELATED மகன் தூக்குபோட்டு தற்கொலை