×

மகன் தூக்குபோட்டு தற்கொலை

நெய்வேலி, ஜூன் 2: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 28 பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளி. இவரது மகன் செல்வகுமார்(32) இவர் அந்த பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்து வருகிறார். இவரது தந்தை வெங்கடாசலம், நெய்வேலி என்எல்சி சுரங்கம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். நேற்று முன்தினம் காலை வெங்கடாசலம் பணிபுரியும் இடத்தில் மேல் அதிகாரிகள் பணி நிறைவுக்கான வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் அப்பாவின் பணி நிறைவு விழாவிற்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என மனைவியிடம் நேற்று முன்தினம் இரவு முதல் புலம்பி கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை அலுவலகத்தில் பணி நிறைவு பெற்று வெளியே வரும் வெங்கடாசலத்தை அழைப்பதற்கு குடும்பத்தினர் சுரங்கம் ஒன்றின் நுழைவு வாயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த செல்வகுமார், வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தெர்மல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மகன் தூக்குபோட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Venkatachalam ,Circle 28 ,Neyveli Township ,NLC ,Selvakumar ,
× RELATED பூசாரியை தாக்கிய 3 பேர் கைது