×

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலி

தர்மபுரி, மார்ச் 27:  தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வெங்கடேசன் (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்பவருக்கும், கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. ேநற்று முன்தினம் மனைவியை அழைத்து கொண்டு, இருசக்கர வாகனத்தில், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற வெங்கடேசன், இரவு வீட்டிற்கு திரும்பினார். வழியில் ஓஜிஅள்ளி பிரிவு சாலையில் வந்தபோது, வளைவில் நிலை தடுமாறி, இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தனர். இதில் வெங்கடேசன் படுகாயமடைந்தார். முனியம்மாளுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், வெங்கடேசனை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

Tags : newman ,accident ,
× RELATED கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி...