தென்காசி தொகுதிக்கு ஒரே நாளில் மாஜி போலீஸ்காரர் உள்பட 3 சுயேட்சைகள் மனுதாக்கல்

தென்காசி, மார்ச் 26: தென்காசி மக்களவைத் தொகுதிக்கு நேற்று ஒரே நாளில் முன்னாள் போலீஸ்காரர் உள்பட 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த 19ம் தேதி  வேட்புமனு தாக்கல் துவங்கியது. இதில் நாம் தமிழர்  கட்சியை சேர்ந்த மதிவாணன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.  இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுபெறும் நிலையில் நேற்று ஒரே நாளில்  திமுக வேட்பாளர் தனுஷ்குமாரைத் தவிர்த்து மொத்தம் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்  செய்தனர்.  திருவேங்கடம் தாலுகா அழகுநாச்சியார்புரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற  காவலர் பெருமாள் (70), வடநத்தம்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி (59),  ராஜபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (48) என மொத்தம் 3 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  தென்காசி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரை தென்காசி கோட்டாட்சியர் அலுவலகம்  நெல்லை கலெக்டர் அலுவலகம் ஆகிய இரு இடங்களிலும் மனு தாக்கல் நடைபெறும்  நிலையில் நேற்று வரை தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் மொத்தம் 5  பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் திமுக வேட்பாளர் தனுஷ்குமார் தனது  பெயரில் இரு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். எனவே வேட்பாளர்களின்  எண்ணிக்கை ஐந்தாக இருந்த போதும் வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 6 ஆக உள்ளது.  இது தவிர நெல்லையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி  நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

Related Stories:

>