×

தம்மம்பட்டியில் 10ம் தேதி ஜல்லிக்கட்டு

தம்மம்பட்டி, மார்ச் 7:  தம்மம்பட்டியில், வருகிற 10ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. இதற்காக டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. தம்மம்பட்டி பேரூராட்சியில், ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம். ஆனால், சில காரணங்களால் இந்த ஆண்டு போட்டிகளை நடத்த முடியாமல் போனது. இந்நிலையில், வருகிற 10ம் தேதி, தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக விழாக்குழுவினர் நேற்று 150 மாடுகளுக்கு டோக்கன் வழங்கும் பணியை தொடங்கினர். பல்வேறு, பகுதியில் இருந்து காளை மாடுகள் வைத்திருப்போர் டோக்கன்களை வாங்கி சென்றனர். இதில் 200 டோக்கன்கள் குடத்தில் போட்டு வரிசையாக வழங்கப்பட்டது.

Tags : Dhamamampatti ,
× RELATED தம்மம்பட்டி பகுதியில் காலிபிளவரில் மகசூல் பாதிப்பு விவசாயிகள் கண்ணீர்