×

தண்டராம்பட்டு ஊராட்சியில் சீரான குடிநீர் கேட்டு பிடிஓ அலுவலகம் முற்றுகை

தண்டராம்பட்டு, பிப்.22: தண்டராம்பட்டு ஊராட்சியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள், பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தண்டராம்பட்டு ஊராட்சி மேட்டுத்தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், கலெக்டர் என அடுத்தடுத்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேலாளர் கோவிந்தராஜிடம் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோரை அழைத்து, பொதுமக்கள் புகார் அளித்த பகுதிக்கு உடனடியா சென்று விசாரணை நடத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனனர்.



Tags : water drinking ,Tantarampattu ,office ,PDO ,
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...