×

தம்பியை தாக்கிய அண்ணன்களுக்கு போலீஸ் வலை நிலத்தில் மண் கொட்டிய தகராறு

வந்தவாசி, மே 16: வந்தவாசி அருகே நிலத்தில் மண் கொட்டிய தகராறில் தம்பியை தாக்கியை அண்ணன்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி(55), அதே கிராமத்தை சேர்ந்த இவரது சகோதரர்கள் அய்யாசாமி(60), கிருஷ்ணமூர்த்தி(62). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அருகருகே உள்ளன. கடந்த 15 தினங்களுக்கு முன்பு திருமூர்த்தி தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மண் கொட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பிரச்னையில் அவரது அண்ணன்கள் அய்யாசாமி, கிருஷ்ணமூர்த்தி, அய்யாசாமி மகன் மோகன்(28) ஆகியோர் ஒன்று சேர்ந்து, கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்த திருமூர்த்தி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த திருமூர்த்தியை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து திருமூர்த்தி மகன் முருகவேல் பொன்னூர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அய்யாசாமி உட்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post தம்பியை தாக்கிய அண்ணன்களுக்கு போலீஸ் வலை நிலத்தில் மண் கொட்டிய தகராறு appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Thirumurthy ,Elangadu ,Ayyasamy ,Krishnamurthy ,Dinakaran ,
× RELATED வந்தவாசி பகுதியில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி