×

பைக் திருடும் மர்ம ஆசாமி வீடியோ வைரல் ஆரணியில் நள்ளிரவில்

ஆரணி, மே 19: ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(49). இவர், ஆரணியில் உள்ள ரைஸ்மில்லில் குமாஸ்தாவாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஆரணி டவுன் கமண்டல நாகநதி ஆற்றுப்பாலம் அருகில் ரைஸ்மில்லுக்கு சொந்தமான எடை மேடை உள்ளது. இங்கு பணிபுரிபவர், வேலைக்கு வராததால், முருகன் நேற்றுமுன்தினம் இரவு எடைமேடைக்கு எடைபோடும் வேலைக்கு வீட்டில் இருந்து தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பைக்கை எடைமேடை அருகில் நிறுத்திவிட்டு வேலை செய்துள்ளார். அப்போது, வாகனங்கள் எதுவும் வராததால் எடைமேடை அலுவலகத்திலேயே தூங்கியுள்ளார். காலை வெளியே வந்து பார்த்தபோது, பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் எங்கு தேடியும் பைக் கிடைக்கவில்லை. இதனால், அங்குள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது, மர்ம ஆசாமி ஒருவர் பைக்கை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, ஆரணி டவுன் போலீசில் முருகன் நேற்று கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பைக் திருடிச்சென்ற மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர். இந்நிலையில், எடைமேடை கடையின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கை நள்ளிரவில் மர்மநபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பைக் திருடும் மர்ம ஆசாமி வீடியோ வைரல் ஆரணியில் நள்ளிரவில் appeared first on Dinakaran.

Tags : Arani ,Murugan ,Rattinamangalam ,Kamandala Naga river bridge ,
× RELATED ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில்...