×

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நேர்காணல் 71 பேர் தேர்வு செய்யப்பட்டனர் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, மே 18: திருவண்ணாமலையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கு நடந்த நேர்காணலில் 71 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையின் தேவைகள் அதிகரித்து உள்ளது. எனவே, 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அரசு படிப்படியாக உயர்த்தி வருகிறது. அதையொட்டி, ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க நேரடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான நேர்காணல் நேற்று நடந்தது. 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் கண்ணன் முன்னிலையில், மேற்பார்வையாளர் சண்முகம், ஒருங்கிணைப்பாளர்கள் அருண், அஜித், பிரவீன், வினோத் உள்ளிட்டோர் நேர்முகத்தேர்வு நடத்தினர்.

அதில், மருத்துவ உதவியாளர் பணிக்கு 133 பேர், டிரைவர் பணிக்கு 162 பேர் உட்பட 295 பேர் கலந்து கொண்டனர். கல்வித்தகுதி, வயது, உடற்தகுதி, அனுபவம் முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு 47 நபர்களும், டிரைவர் பணிக்கு 24 நபர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. சென்னையில் ஒரு மாத காலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு, தங்களுக்கு ஒதுக்கப்படும் மாவட்டங்களில் அனைவரும் பணியில் சேர உள்ளனர்.

The post 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நேர்காணல் 71 பேர் தேர்வு செய்யப்பட்டனர் திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Tamil Nadu ,108 Ambulance ,Tiruvannamalai ,
× RELATED 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இணை இயக்குனர் பாராட்டு