ஊத்தங்கரை அரசு பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

ஊத்தங்கரை, பிப்.13:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு போக்குவரத்து பயணப்படி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாதப்பன் தலைமை தாங்கினார். இதில் 11 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதம் 545 வீதம் 7 மாதங்களுக்கு தலா ₹3815 வீதம் மொத்தம் ₹41,965 போக்குவரத்து பயணப்படி வழங்கப்பட்டது. இதை உதவி தலைமை ஆசிரியர் கணேசன் கூறினார். இந் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் லோகேஷ், பெருமாள், சஞ்சய், ஆகாஷ், பயாஸ், பூவரசன், ரவிக்குமார், ஜோதிஸ்வரன், பிரேம்குமார், நதீஷ், நேதாஜி மற்றும் பெற்றோர்கள் கலந்து

Tags :
× RELATED கல்வி உதவித்தொகை பெற காலநீட்டிப்பு