×

மதுரை முஸ்லிம் லீக் மாநில மாநாடு நெல்லை மேற்கு மாவட்டத்திலிருந்து 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செல்ல முடிவு

தென்காசி, பிப்.13:  மதுரையில் 16ம் தேதி நடைபெறும் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டிற்கு நெல்லை மேற்கு மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் செல்வதாக மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் கூறினார்.  
 தென்காசியில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இதயங்களை இணைப்போம் இந்தியாவை மீட்போம் என்ற தலைப்பில் முஸ்லிம் லீக் மாநில மாநாடு மதுரை ஒத்தக்கடை பி.ஆர்.பி.மைதானத்தில் வரும் 16ம் தேதி மாலை 4 மணிக்கு தேசிய தலைவர் காதர்மொகிதீன் தலைமையில் நடக்கிறது.
 மாநாட்டில் சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபட்ட இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ அறிஞர்களுக்கு சிராஜீல்மில்லத் விருதும், பல ஆண்டு காலம் இக்கட்சியில் உழைத்து வரும் தொண்டர்களுக்கு காயிதேமில்லத் விருதும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசு பணியில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு, முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், தேசிய ஒருமைப்பாடு சமய நல்லிணக்கம் சிறுபான்மையினர் தனித்தன்மை மத்தியிலும் மாநிலத்திலும் மதசார்பற்ற ஆட்சி அமைய வேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி, வடகரை, ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, வாசு, அருளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட நிர்வாகிகள் இக்பால், அப்துல்அஜீஸ், கலீல்ரகுமான், அப்துல்வகாப், செய்யது சுலைமான், ஹாருன்முகைதீன், முகம்மது முஸ்தபா, தலைமை நிலைய பேச்சாளர் முகம்மது அலி, நகர நிர்வாகிகள் அபூபக்கர், முகம்மது உசேன், செய்யது மசூது, அப்துல்லத்தீப், அப்துல்வகாப், ஹபிபுல்லா, ரகுமத்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Madurai ,Muslim League State Convention ,district ,Nellai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை