×

பாறைகளாக தென்படும் நீர்மின் கதவணை ஓமலூர் அருகே சாலை விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்

ஓமலூர், பிப்.8: ஓமலூர் அருகே சாலை விதிகளை மீறிய 3 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில், 30வது சாலை பாதுகாப்பு வாரவிழா சுங்கச்சாவடி அருகே நடந்தது. இதில், டூவீலர் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவும், கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் சென்ற 125 வாகனங்களை சோதனையிட்டதில், முறையான ஆவணங்கள், பராமரிப்பு, போதிய பாதுகாப்பு வசதியின்மை உள்ளிட்ட குறைபாடுகள் காணப்பட்ட 2 சரக்கு வாகனங்கள், ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமீறிய பல்வேறு வாகன ஓட்டிகளுக்கு ₹42,500 அபராதம் விதித்தனர். பின்னர், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதில், ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : watershed ,corridor ,Omalur ,
× RELATED ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!!