×

காரைக்கால் அரசு பள்ளியில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி

காரைக்கால், பிப்.7:  காரைக்கால் திருவேட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியும், பெற்றோர், ஆசிரியர் சங்கமும் இணைந்து ஸ்மார்ட் கிளாஸ் துவக்கவிழா, தேசிய  அளவில் பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு  பாராட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவிற்கு புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை  துவக்கி வைத்தார். தொடர்ந்து தேசிய அளவில் பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கம் வென்ற அப்பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி விசித்திராவையும், புதுச்சேரி அளவில் தங்கம், வெள்ளி வென்ற அதே பள்ளி மாணவிகள் பூங்குழலி, மோனிகா மற்றும் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும் அமைச்சர் பாராட்டி பேசினார். மேலும், விசித்ரா என்ற மாணவிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசையும் அமைச்சர் வழங்கி சிறப்பித்தார். விழாவில் நெடுங்காடு தொகுதி எம்எல்ஏ சந்திரபிரியங்கா, மாவட்ட கல்வித் துறை  துணை இயக்குனர் கேசவ், பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Karaikal Government School ,
× RELATED காரைக்கால் அரசு பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி