×

காரைக்கால் அரசு பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால், பிப்.11: காரைக்கால் திருமலைராயன்பட்டினம் அரசு நடுநிலைப் பள்ளியில், நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் திருமலைராயன்பட்டினம் அரசு நடுநிலைப்பள்ளியில், திருமலைராயன்பட்டினம் நுகர்வோர் நலச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தொடர்ந்து, ஒவ்வொரு நுகர்வோரும், பொருட்களை பணம் கொடுத்து எங்கு வாங்கினாலும், வாங்கிய பொருளுக்கு ரசீது அவசியம் கேட்டு வாங்க வேண்டும்.  அப்போதுதான் பொருள் சரியில்லையென்றாலும், காலாவதியானாலும், திருப்பி கொடுக்கவோ, வழக்கு தொடரவோ முடியும், கலப்பட பொருட்களை எவ்வாறு கண்டறிவது, எரிவாயு உருளை பெறும் போது வேண்டிய விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு நுகர்வோர் விளக்க கையேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சங்க கவரவத் தலைவர் கணபதி, துணைத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், பொருளாளர் சந்தனசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை, ஆசிரியை சுபலட்சுமி தொகுத்து வழங்கினார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் மதியழகன் வரவேற்றார். முடிவில், ஆசிரியை யோகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags : Karaikal Government School ,
× RELATED காரைக்கால் அரசு பள்ளியில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி