×

சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு: ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்

நாகப்பட்டினம், ஜூன் 16: சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு சீரமைத்தல் தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார். சந்தை மதிப்பு வழிகாட்டி சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தி அமைத்தலுக்கான மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, விதிகளில் விதி 4(2)-ன்படி மையமதிப்பீட்டு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குழுவின் நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தாசில்தார், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விபரங்கள் www.tnreginet.gov என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருந்தால் 15 நாட்களுக்குள் கலெக்டர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

The post சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு: ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Collector ,Janidam Varghese ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினத்தில் கறவை மாடு கடன்பெற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது