×

கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம்

நாகப்பட்டினம், ஜூன் 16: பக்ரீத் பண்டிகை முன்னிட்டு செம்மறி ஆடுகள் விற்பனைக்கு நாகூர் வந்துள்ளது. இறைவனின் கட்டளையை ஏற்று தன் மகனை தியாகம் செய்ய துணிந்த இப்ராஹீம் நபியின் தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் தியாக பெருநாளாக பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த பக்ரீத் பண்டிகையின் போதும் ஏழை எளியோருக்கும் இஸ்லாமியர்கள் குர்பானி வழங்குவது வழக்கம். இதற்கான சந்தையின் ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நாளை (17ம் தேதி) கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டுபுதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, அரியலூர், ஆகிய ஊர்களில் இருந்து நாகூருக்கு 3000க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆடுகள் கொண்டு வர வாகன செலவு ரூ.8 ஆயிரம் ஆகிறது. இதனால் ஒரு ஆடு ரூ.13 ஆயிரம் முதல் ரூ. 26 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயில் கொடுமையால் ஆடுகளுக்கு தீவனம் பற்றாக்குறையால் ஆடுகள் விலை உயர்ந்துள்ளது.

The post கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Bakrit ,Muslims ,Prophet ,Ibrahim ,God ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிமுக நிர்வாகி கைது