×

கால்களால் ஓவியம் வரைந்த மாற்றுத்திறன் மாணவர்

 சேலம், பிப் 6: சேலத்தில் நடந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில், கால்களால் மாற்றுத்திறனாளி மாணவர் ஓவியம் வரைந்தது பார்வையாளர்களின் கவனத்ைத வெகுவாக ஈர்த்தது. சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நேற்று முன்தினம் வலசையூர் அரசுப்பள்ளியில் ஓவியப்போட்டி நடந்தது. இப்போட்டியில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை மாணவர்கள் வரைந்தனர். இந்த நிகழ்ச்சியில் அதே பள்ளியில் படிக்கும் 9ம்வகுப்பு மாணவர்  ராஜா, கால்களால் ஓவியம் வரைந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் கவனத்தை ெவகுவாக ஈர்த்தது. கால்களால் இயல்பாக 2 ஓவியங்களை அவர், வரைந்தது கண்டு அனைவரும் பாராட்டினர். இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுைகயில், ‘‘மாணவர் ராஜாவின் 2கைகளும் செயலிழந்த நிலையில்  உள்ளது. அயோத்தியாப்பட்டிணத்தில் உள்ள கருணை இல்லத்தில் தங்கியிருந்து வலசையூர் பள்ளியில் படித்து வருகிறார். வாய் பேச முடியாது, காதும் கேட்காது.

இந்த மாணவரிடம் சிறப்பு ஆசிரியர் அமிர்தவள்ளி, தனிக்கவம் செலுத்தி சாதனை முயற்சிகளுக்கு ஊக்கமூட்டி வருகிறார். கால்களால் பேனாவை வைத்து தேர்வு எழுதி வருகிறார். குடிநீரையும் கால்களால் தான் எடுத்து குடிப்பார். கால்களால் ஓவியம் வரையும்  பயிற்சியும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஓவியங்களை வரைந்து வருகிறார். இதுபோல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் ெபற்றுள்ளார்,’’  என்றனர்.  
 இதை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தாமோதரன், சரவணபவன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதுவைநாதன், குலோத்துங்கன், வெங்கடேஷ், செந்தில் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் தலைமையில் நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்,’’ என்றனர்.
அறுவடை செய்த கரும்புகளை லாரிகளில் ஏற்றும் பணி தீவிரம்

Tags : student ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...