×

குருபரப்பள்ளி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, பிப்.6:  குருபரப்பள்ளி அருகே நடந்து சென்ற தொழிலாளி மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் சையதுபாஷா (55). இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மேலுமலைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி, சையது பாஷா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார். தகவலறிந்து வந்த குருபரபள்ளி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags : Larry ,collision worker ,Guruparapalli ,
× RELATED ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த மருத்துவ மாணவன் தற்கொலை