×

சோமூரில் ஊர்புற நூலகத்தை அரசு இடத்திற்கு மாற்ற வேண்டும்

கரூர்,பிப்.1:கரூர் மாவட்டம் கோயம்பள்ளியில் இருந்து சோமூர் செல்லும் சாலையில் ஊரின் நுழைவு வாயிலில் ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் இந்த நூலகம் செயல்படும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. மாதம் ரூ. 500 வாடகையில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த நூலகத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பயனுள்ள புத்தகங்கள் உள்ளன. தினமும் 50க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். 20க்கும் மேற்பட்ட புரவலர்கள் உள்ளனர். இந்நிலையில், தேவையான அளவு நூலகத்துக்கு இடமில்லாத காரணத்தினால், நூலகத்துக்கு வரும் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும், நின்று கொண்டுதான் புத்தகங்களை வாசித்து செல்லும் நிலை இங்கு நிலவி வருகிறது. ஊரின் வெளிப்புற பகுதியில் இந்த நூலகம் செயல்படுவதால் வாசகர்களின் வருகையும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.சோமூரின் மையப்பகுதியில் இந்த நூலகத்தை அரசு கட்டிடத்தில் கொண்டு வந்து, அனைத்து வாசகர்களும் வந்து செல்லும் அளவுக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என இந்த பகுதியினர்களும், பொதுநல ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.ஆனால், இடவசதி குறைவு காரணமாக, எந்த நோக்கத்திற்காக இந்த நு£லகம் கொண்டு வரப்பட்டதோ? அந்தளவுக்கு அதன் செயல்பாடுகள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பகுதியினர் கூறுகையில், சோமூர் ஊராட்சி அலுவலகம் உள்ள பகுதியிலேயே தேவையான காலியிடங்கள் உள்ளது. அந்த பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டி, நூலகத்தை அங்கு மாற்ற அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும். இடவசதியுடன் கூடிய நூலகம் அமைக்கப்பட்டால் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். அதன் நோக்கமும் நிறைவேறும். ஊர்ப்புற நூலகமான இந்த நூலகம், ஊரின் வெளிப்புறத்தில் செயல்படுகிறது. எனவே, நூலகத்தை சோமூரின் உட்பகுதியில் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்

Tags : government space ,
× RELATED அணைக்கட்டு அருகே அரசு இடத்தை...