×

அணைக்கட்டு அருகே அரசு இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்ட முயற்சி தடுத்து நிறுத்திய வருவாய்த் துறையினர்

அணைக்கட்டு, டிச. 19: அணைக்கட்டு அருகே அரசு இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்ட முயன்ற தனிநபரை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அணைக்கட்டு தாலுகா பிச்சாநத்தம் கிராமத்தில் ஏரிநீர் நிரம்பி செல்லும் கால்வாய் அருகே இருந்த 2 புளியமரங்களில் ஒரு மரத்தை கடந்த 10ம் தேதி இரவோடு இரவாக சிலர் வெட்டி அகற்றியுள்ளனர். அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரத்தை வெட்டியதால், இது தொடர்பாக வருவாய் துறை சார்பில் வேப்பங்குப்பம் காவல்நிலையத்திலும், கிராம மக்கள் சார்பில் ஆர்டிஓ அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மரம் வெட்டப்பட்ட இடத்தினை அதே பகுதியை சேர்ந்த அதன் அருகில் வீடு கட்டிவரும் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்ப கடக்கால் போடும் பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள்,வருவாய் துறையினரிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் சாதிக்பாஷா, விஏஓ சாட்லுதுரை மற்றும் வருவாய் துறையினர் நேற்று முன்தினம் அங்கு சென்று இது அரசுக்கு சொந்தமான இடம், இந்த இடத்தில் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டக்கூடாது எனக்கூறி பணியை தடுத்து நிறுத்தினர். பிரச்னை உள்ள இடத்தில் வேலை செய்ய கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கிருந்தவர்களிடம் எச்சரித்து விட்டு சென்றனர்.

Tags : Revenue Department ,dam ,government space ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில்...