×

ஜேப்படி ஆசாமி கைது

கிருஷ்ணகிரி, ஜன.29:  கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர்  சீனிவாசன் (40). அங்குள்ள மளிகை கடையில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் மாலை ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் நின்று  கொண்டிந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், சீனிவாசன் பாக்கெட்டில் இருந்து ₹500ஐ திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார். அங்கிருந்தவர்கள் உதவியுடன் சீனிவாசன் அவரை மடக்கி பிடித்து ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் ராயக்கோட்டை கருத்தமட்டியை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Jathai Asami ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு