லண்டனில் இருந்து ஊர் திரும்பிய யோகா மாஸ்டருக்கு மிரட்டல்

போச்சம்பள்ளி, ஜன.25:  போச்சம்பள்ளி அடுத்த தட்ரஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ்(35). யோகா மாஸ்டரான இவர், லண்டனைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு அங்கேயே வசிக்கிறார்.
அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார். ஊருக்கு வரும்போதெல்லாம், அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக யோகா பயிற்சிகள் அளிப்பார். இந்நிலையில், தன்னுடைய சித்தப்பா மகன் ராஜ்குமார் மூலமாக குட்டூரைச் சேர்ந்த முனியப்பன்(29), தேவரஅள்ளியைச் சேர்ந்த பாரிவள்ளல்(30) ஆகியோரிடம் கடந்த ஓராண்டுக்கு முன்பு ₹1 லட்சம் கடனாக பெற்றார்.  இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காமராஜ் சொந்த ஊருக்கு வந்தார். இதகுறித்து அறிந்த முனியப்பன், பாரிவள்ளல் ஆகியோர் சென்று பணத்தை திருப்பி கேட்டு காமராஜிடம் தகராறு செய்து,
காமராஜின் காரையும் எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து காமராஜ் பாரூர் போலீசில் புகார் அளித்தார். அதில், முனியப்பன், பாரிவள்ளல் ஆகியோரிடம் பெற்ற கடனை திருப்பி கொடுத்து விட்டதாகவும், மீண்டும் பணத்தை கேட்டு தொந்தரவு செய்வதுடன், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி முனியப்பன், பாரிவள்ளல் ஆகியோரை கைது செய்தனர்.  

× RELATED ஓட்டுநர் பார்த்த ‘படத்தால்’ லண்டன் நகர ரயிலில் பயணிகள் தர்மசங்கடம்