×

திமுக சார்பில் கலைவாணர் படிப்பக புதிய கட்டிடம் திறப்பு

கீழ்வேளூர்,ஜன.18: நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் அத்திப்புலியூரில் திமுக சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைவாணர் படிப்பக புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மதிவாணன் எம்.எல்.ஏ., கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனியப்பன்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தை நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கேஸ்செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : New Building Opening of Kalivana Student ,DMK ,
× RELATED சர் ஐசக் நியூட்டன் பொறியியல்,...