- உழவாரித்தேடி
- Thirumarugal
- கலெக்டர்
- ஆகாஷ்
- நாகப்பட்டினம்
- உத்தமசோழபுரம்
- திருமருகல் வட்டம்
- துணை தோட்டக்கலை அலுவலர்
- செல்லப்பாண்டியன்
- பஞ்சாயத்து செயலாளர்
- பாலசுந்தரம்
நாகப்பட்டினம், ஜன.12: திருமருகல் அருகே உத்தமசோழபுரம் ஊராட்சியில் உழவரைத்தேடி வேளாண்மை முகாம் நடந்தது. திருமருகல் வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மானிய விலையில் விண்ணப்பம், மாடித்தோட்டம் அமைக்க கிட் மற்றும் முழு மானிய விலையில் காய்கறிகள் விதைத் தொகுப்பு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. காரைக்கால் பஜன்கோ வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விவசாயம் மற்றும் சாகுபடி முறைகள் பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். உதவி தோட்டக்கலை அலுவலர் அய்யப்பன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
