×

விவேகா மெட்ரிக் பள்ளியில் கலந்தாய்வு கூட்டம்

சேந்தமங்கலம், ஜன.9: சேந்தமங்கலம், விவேகா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான பெற்றோர்களின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு குழந்தைகளின் கல்வித்திறனை பற்றி கேட்டறிந்தனர். அவர்களின் ஒழுக்க நடவடிக்கைகள் பற்றி ஆசிரியர்களிடம் கலந்தாய்வு செய்தனர். கூட்டத்தில் பள்ளியின் தலைவர் நாகராஜன் பேசியதாவது: வகுப்பில் கற்றுக் கொடுக்கும் பாடத்தை பெற்றோர்கள் ஒருமுறையாவது கட்டாயம் வீட்டில் படிக்க வைக்கவேண்டும். கல்வியை விட ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தந்தால், பின்னாளில் சிறந்த கல்வியை அது தரக்கூடும். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் நல்ல பழக்க வழக்கங்களையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பள்ளியின் செயலாளர் பாண்டுரங்க குப்தா, பள்ளியின் முதல்வர் சுமதி மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Counseling meeting ,Viveka Metric School ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்