×

பல்லடம் பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் பணம் பறிப்பு

பொங்கலூர், ஜன..4:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்  எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று மாலை பேருந்து நிலையத்தில் உள்ளே வந்த அரசுப்பேருந்து ஒன்றில் இருந்து  கர்ப்பிணி ஒருவர் இறங்கி நடந்து சென்றார். அவரை பின் தொடர்த சுமார் 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் அய்யோ திருடி திருடி என அலறியவாறு கர்ப்பிணியை பின்தொடர்ந்து  விரட்டியபடி சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுனர் சிலர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக அப்பெண் பதில் கூறியதால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் அந்த பெண்ணை பிடித்து நிறுத்திவைத்து, உடனடியாக பல்லடம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
 இதையடுத்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார், கர்ப்பிணிப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



Tags : bus stand ,Palladam ,
× RELATED சாலையோர கடைகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம்