×

கள்ளிப்புறாவை கூண்டில் அடைத்து வைத்திருந்த கண்காட்சி உரிமையாளர் மீது வழக்கு

திருப்பூர், ஜூன் 20: திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட திருப்பூர்-பல்லடம் ரோடு, ராயர் பாளையத்தில் செல்லப் பிராணிகள் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி நடந்தது. இந்நிலையில், நேற்று திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் தலைமையிலான வனக்காவலர்கள் வன உயிரினங்கள் ஏதேனும் உள்ளதா? என சோதனை செய்தனர். அங்கு யுரேஷியன் காலர் டவ் என்ற கள்ளிப்புறா கூண்டில் அடைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்.

அந்த பறவையானது பாதுகாக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட உயிரினம் என்பதால் பறவையை கைப்பற்றி அந்நிறுவன உரிமையாளர் ஷாஜகான் என்பவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். இவ்வாறு, அட்டவணை படுத்தப்பட்ட பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களை வைத்திருப்பது வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி குற்றமாகும். என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். எனவே, பொதுமக்கள் கிளி, கள்ளிப்புறா போன்ற அட்டவணைப்படுத்தப்பட்ட வன உயிரினங்களை வீட்டிலோ, விற்பனை நிலையங்களிலோ வளர்க்கவோ அல்லது பிடித்து விற்பனை செய்ய முயல்வது கூடாது எனவும், மீறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் கூறினர்.

The post கள்ளிப்புறாவை கூண்டில் அடைத்து வைத்திருந்த கண்காட்சி உரிமையாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tirupur-Palladam Road, Royer Camp, Tiruppur District ,Wildlife Sanctuary ,Wildlife Officer ,Suresh Krishnan ,
× RELATED காங்கேயம் அருகே வீட்டின் மேல் விழும்...