×

வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம்

 

திருப்பூர், ஜூன் 21: புதியதாக ஆதார் எடுக்கவும், ஏற்கனவே ஆதார் கார்டு இருக்கிறவர்கள் ஆதார்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மாவட்டம் முழுவதும் ஆதார் மையங்கள் மற்றும் இசேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அங்கு செல்கிற பொதுமக்கள் ஆதார் தொடர்பான தங்களது திருத்தங்களை செய்து கொள்கிறார்கள். இதுபோல் புதியதாகவும் ஆதார் கார்டு எடுக்க விண்ணப்பிக்கவும் செய்கிறார்கள்.

இந்நிலையில் இந்த ஆதார் சேவை மையங்கள் தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை செயல்படுவதில்லை.இதுபோல் அரசு விடுமுறை நாட்களிலும் செயல்படுவதில்லை. இதற்கிடையே வேலைக்கு செல்கிறவர்கள் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகளின் வசதிக்காக ஆதார் மையங்களில் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் ஒவ்வொரு தாலுகா வாரியாக சுழற்சி முறையில் சிறப்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் சிறப்பு முகாம் வருகிற 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் மாலை வரை செயல்படும். இதில் புதியதாக ஆதார் எடுக்க விரும்புகிறவர்கள் மற்றும் ஆதார்களில் திருத்தங்கள் மேற்கொள்கிறவர்கள் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Aadhaar Special Camp ,North ,Taluk Office ,Tirupur ,Aadhaar ,North Taluk Office ,Dinakaran ,
× RELATED ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன்...