×

முன் விரோதத்தில் தாக்கியதில் காயமடைந்த வாலிபர் சாவு

அவிநாசி, ஜூன் 19: அவிநாசி அருகே பொங்குபாளையம் ஊராட்சி பரமசிவம்பாளையத்தில் தனியார் பிரிண்டிங் நிறுவனம் உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சத்துவதா பத்ரா, இவரது மகன் ராஜுபத்ரா (22). இவர்கள் 18 மாதங்களாக குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தனர். அவர்களுடன் அதே கம்பெனியில் கஜேந்திர தாய் (29) என்பவரும் வேலை செய்து வந்தார் இவர்களது குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி ராஜபத்ரா, கஜேந்திரதாய் இருவரும் மது குடித்தனர்.

இருவரும் முன்விரோதம் காரணமாக சண்டையிட்டு கொண்டனர். இதில் ராஜு பத்ரா பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ராஜு பத்ரா உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒடிசா தொழிலாளி கஜேந்திர தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

The post முன் விரோதத்தில் தாக்கியதில் காயமடைந்த வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Pongupalayam panchayat Paramasivampalayam ,Satthuvada Patra ,Odisha ,Rajubatra ,
× RELATED கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல்...