×

பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர் திரளாக பங்கேற்பு

 

திருப்பூர், ஜூன் 18: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பெருநாளையொட்டி திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட தேவராயம்பாளையத்தில் உள்ள பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நேற்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஈத்கா மைதானத்தில் காலை 8.25 மணிக்கு சிறப்பு பயான் தொடங்கி, 9 மணி அளவில் 2-வது சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் உலாமா ஜாபர் சாதிக்குடைய ஏழை, எளியவர்களுக்கு தானங்கள் (ஈகை) செய்வது போன்றவற்றால் ஏற்படும் நன்மைகளை பற்றியும், பயான் மற்றும் சிறப்பு தொழுகையுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த அனைத்து இஸ்லாமிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

The post பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Bakrit ,Tiruppur ,Bakrit Special Prayer ,Devaryampalayam ,Tirumuruganpundi ,Eidka Stadium ,Baqrit Special Prayer ,
× RELATED பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில்...