×

கறம்பக்குடி அருகே 3 வார சம்பள தொகை கேட்டு 100 நாள் பணியாளர்கள் மறியல்

கறம்பக்குடி, டிச.21: கறம்பக்குடி அருகே 3 வார சம்பள தொகை கேட்டு 100 நாள் பணியாளர்கள் சாலை மறியிலில்
ஈடுபட்டனர்.கறம்பக்குடி அருகே பிலாவிடுதி ஊராட்சியில் பிலாவிடுதி, மேற்கு, ஆண்டான் தெரு, தொண்டைமான் தெரு, கருமாலி தெரு, சாஞ்ஜாடி தெரு, அம்மானிப்பட்டு, பூசாரி தெரு, மானியவயல், ஆதிதிராவிடர் காலனி,  கொண்டையன் தெரு போன்ற பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராம மக்கள் ஏராளமானோர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரிந்து வருகின்றனர். பணி புரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3 வார காலமாக அதற்குரிய சம்பள தொகை வழங்கவில்லை என்றும், தங்களது வங்கி கணக்கில் தொகை ஏறவில்லை என்று கூறி 100 நாள்  பணியாளர்கள் பிலாவிடுதி மானியவயல் செல்லும் சாலை பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கறம்பகுடி போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் (தணிக்கை) பொதுமக்களிடம் இரு  தினங்களுக்குள் அவர்கள் வங்கி கணக்கில் சம்பளம் சம்பள தொகை செலுத்தப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்

Tags :
× RELATED புதுக்கோட்டையில் நாளை வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்