×

சம்பா, தாளடி பயிர்களில் நெற்பழ நோயின் தாக்குதல் கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் விளக்கம்

மன்னார்குடி, டிச. 20: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ள வடுவூர் புதுக்கோட்டை, சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெல் வயல்களை  வேளாண் அறிவியல் நிலைய விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் ராம சுப்ரமணியன் மற்றும் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா ரமேஷ் ஆகியோர்
நேற்று  ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு குறித்து கூறுகையில், ஒரு சில வயல்களில் நெற்பழ நோயின் தாக்குதல் தென்படுகிறது. இது மஞ்சள் காராப்பூட்டை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோயானது அஸ்டிலாஜி நாய்டியா வைரஸ் என்ற பூஞ்சாணத்தால் உண்டாகிறது. நெற் பயிரின் பூக்கும் தருணத்திலும், கதிர் வெளிவரும் சமயத்திலும் இதன் தாக்கு தல் மிகவும் அதிகமாகக் காணப்படும்.  காற்றினில் 90 சதத்திற்கும் அதிகமான ஈரப்பதம் காணப்படுதல்,  20 முதல் 25 டிகிரி  செல்சியஸ் கொண்ட குறைந்த வெப்பநிலை மற்றும் இரவு நேர பனி மற்றும் வேகமான காற்று வீசும் போது ஒரு பயிரிலிருந்து மற்ற பயிர்களுக்கு பூசண வித்துக்கள் எளிதாகப் பரவும். பூக்கும்  தருணம் மற்றும் கதிர்  வெளிவரும் சமயத்தில் மழை பெய்வதும் அப்போது நிலவும் மந்தமான சீதோஷ்ண நிலையும் இந்நோய் தீவிரமாவதற்கு காரணமாக அமைகின்றன.

இந்நோய் பாதிப்புக்குள்ளான விதைகள்,  காற்று, மண் மற்றும் நீர் மூலமாக பரவுகிறது. எனவே  இந்நோய் தாக்காத விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.  நெற்பழ நோய் தாக்குதலிலிருந்து நெற்பயிரை பாதுகாக்க கலப்பு கதிர்  வெளிவரும் போது ஒரு முறையும், பால் பிடிக்கும் தருவாயில் ஒரு முறையும் ஒரு ஏக்கருக்கு புரோபிகோனசோல் 200 மி.லி அல்லது காப்பர் ஹைட்ராக் ஸைடு 500 கிராம் இவற்றில் ஏதாவது ஒரு மருந்தினை 200 லிட்டர்  தண்ணீ ரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை வேளைகளில் தெளிக்க வேண் டும். இந்நோயின் தாக்குதல் அதிகமாகஇருப்பின் 15 நாட்கள் கழித்து மீண்டும் தெளித்து இந்நோயை கட்டுப்படுத்தலாம். அறுவடைக்குப் பிறகு வைக்கோல் மற்றும் பயிர் தூள்களை  அழித்து விட வேண்டும். இதன் மூலம் அடுத்த சாகுபடியில் இவற்றில் தாக்குதல் இல்லாமல் நெற்பயிரைப் பாதுகாக்க
முடியும் என கூறினார்.

Tags : Samba ,Agricultural Science Officers ,
× RELATED ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: பாஜ நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்