×

விழுப்புரத்தில் ஜாக்டோ- ஜியோ போராட்ட விளக்க கூட்டம்

விழுப்புரம், டிச. 18:  விழுப்புரம் மாவட்ட ஜாக்டோ- ஜியோ சார்பில் போராட்டம் குறித்த விளக்கக்கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்தலைவர் அருமுத்துவள்ளியப்பா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் குமார், பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் விஸ்வலிங்கம், அரசுப்பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகயை வலியுறுத்தி கடந்த 4ம் தேதி முதல் நடக்கவிருந்த ஸ்டிரைக் தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வரும் ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கின் நிலையை பொறுத்தும், அரசின் நடவடிக்கையை பொறுத்தும் அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகள் எடுப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : meeting ,Villupuram ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...