×

ஓசூர் தேர்பேட்டை ஏரியில் தூர்வாரும் பணி தொடக்கம்

ஓசூர், டிச.18:  ஓசூர் தேர்பேட்டை ஏரியில் ஆகாய தாமரைகளை தூர்வாரும் பணியை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சிக்கு உட்பட்ட தேர்பேட்டை ஏரியில் ஆகாய தாமரைகள் தூர்வாரும் பணியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி துவக்கி வைத்தார். தேர் பேட்டை ஏரியானது 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை சுற்றிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஏரியில் நீர் இருக்கும்பட்சத்தில் ஆழ்துளை கிணறுகளில் தடையின்றி நீர் கிடைக்கும். தற்போது இந்த ஏரியை(யுனைடெட் வே சென்னை) கேட்டர்பில்லர் நிறுவனம் 50 லட்சம் மதிப்பில் சீரமைக்க உள்ளது. இதற்கான பணிகள் துவக்க விழாவில் கலெக்டர் பிரபாகரன், ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் விமல்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.மனோகரன், கேட்டர்பில்லர் ஓசூர் மக்கள் ஒருங்கிணைப்பு இயக்குனர் ரமேஷ், லட்சுமணன், கிருஷ்ணராவ், வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன், தாசில்தார் முத்துப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Hosur Terrace Lake ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு