×

இழப்பீடு, காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும்

லால்குடி, நவ.23: லால்குடி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் காப்பீட்டு  தொகையினை வழங்க எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி கலெக்டர் ராஜாமணியிடம் லால்குடி எம்எல்ஏ சவுந்திரபாண்டியன்  அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.    கஜா புயலால் லால்குடி தொகுதி தாளக்குடி, அப்பாதுரை, எசனைக்கோரை, த.வளவனூர், திருமணமேடு, வாளாடி, புதுக்குடி, செவந்திநாதபுரம், இடையாற்றுமங்கலம், கூகூர், சாத்தமங்கலம், மும்முடிசோழமங்கலம், எல்.அபிஷேகபுரம், சிறுதையூர், திருமங்கலம், நகர், நெருஞ்சலக்குடி, ஆங்கரை, பம்பரம்சுற்றி,எல்.மருதூர், மாடக்குடி, பூவாளுர், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, மணக்கால்.

கொன்னைக்குடி, ஆதிகுடி, கொப்பாவளி, அரியூர், கீழ்அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் ஏக்கர் ஒன்றுக்கு 1 லட்சம் செலவில் சாகுபடி  செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடும், காப்பீட்டு  திட்டத்தில்  பதிவு செய்து இருந்தவர்களுக்கு இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்டவங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாழை விவசாயத்திற்கு பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதுடன், புதிய கடன் வழங்கி விவசாயிகள் தொடர்ந்து வாழை விவசாயம் செய்திட அரசு உடனடியாக நடவடிக்கை வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED மண்ணச்சநல்லூரில் உலக ஓட்டுநர் தினம் கொண்டாட்டம்