×

வயலூர் கோயிலில் கந்தசஷ்டி விழா

திருச்சி, நவ.1: வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் நவம்பர் 8ம் தேதி தொடங்கி 14 வரை நடக்கிறது. 8ம் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், சண்முகார்ச்சனையும், மாலை 6 மணிக்கு ரக்ஷா பந்தனம், அபிஷேக ஆராதனை, இரவு சிங்காரவேலர் பச்சைமயில், வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். 9 முதல் 12ம் தேதி வரை காலை 8 மணியளவில் சிங்காரவேலர் கேடயத்தில் வீதி உலா வருகிறார். இதையடுத்து சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனை, மதியம் சண்முகார்ச்சனை நடைபெறும். இரவு 8 மணிக்கு முறையே சிங்காரவேலர் சேஷ, அன்னம், வெள்ளி மயில் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 11ம் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுகசூரனுக்கும், 12ம் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கும் பெரு வாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

13ம் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனை, 10.45 மணிக்கு சூரபது மனைவதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.30 மணி க்கு சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெரு வாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறும். முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருள்கிறார். 14ம் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சண்முகார்ச்சனை நடைபெறும். இரவு 7 மணியளவில் தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. தினமும் இரவு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ்கள் இயக்க ப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராணி, நிர்வாக அதிகாரி சுரேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர். 8ம் தேதி துவக்கம் 8ம் தேதி துவக்கம்

Tags : festival ,Vayalur ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!