×

பன்றி வளர்த்தால் கடும் நடவடிக்கை பிடிஓ எச்சரிக்கை

கடவூர், நவ.1: கடவூர் ஒன்றியத்தில் பன்றிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிடிஓ எச்சரிக்கை விடுத்துள்ளார். கடவூர் ஒன்றியத்தில் பன்றிகள் வளர்த்தால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பன்றிகளை பறிமுதல் செய்யப்படும் என பி.டி.ஓ. எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கடவூர் பி.டி.ஒ மனோகரன் கூறுகையில், கடவூர் ஒன்றியத்தில் சில கிராமங்களில் சாதாரண காய்ச்சல்கள் இருந்தது. இப்பொழுது அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவ மனைகளை பொதுமக்கள் நாட வேண்டும். போலி மருத்துவர்களிடம் சென்று காய்ச்சல்கள் காரணமாக பொதுமக்கள் சிகிச்சை பெறக்கூடாது. அரசு மருத்துவர்களை மட்டுமே நாட வேண்டும். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் பன்றிகளை உடனே அதன் உரிமையாளர்கள் அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பன்றிகளை பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
× RELATED கரூர் அருகே மின்சாரம் தாக்கி பலியான மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு