×

தார்சாலை அமைக்கக்கோரி பிடிஓ அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

போச்சம்பள்ளி, அக்.25:  போச்சம்பள்ளி அருகே, கருப்பேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்சாலை அமைக்கக்கோரி, மத்தூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்தூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் உறுப்பினர் கனராஜ் தலைமை  தாங்கினார். அர்ஜூனன், சின்னதம்பி, கோவிந்தராஜ், ராஜப்பன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் கண்ணு, வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் ராமமூர்த்தி, வட்ட  தலைவர் தேவராஜ், செயலாளர்கள், நடராஜ், புள்ளாசெட்டி, செயற்குழு உறுப்பினர் வெங்கட்டரமணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மத்தூர் ஊராட்சி கருப்பேரியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் மாரியம்மன் கோயில் வழியாக கருப்பேரி  ஏரி வரை இருந்த தார்சாலையை சிலர் ஆக்கிரமித்து அகற்றி விட்டு, தற்ேபாது தங்களது சொந்த நிலம் எனக்கூறி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் சாலையை பயன்படுத்தி வந்த மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

Tags : Kori BTO Office ,
× RELATED வனசரக அலுவலருக்கு பிரிவு உபசார விழா