×

நெய்வேலி தொகுதி வாக்குச்சாவடி திமுக முகவர்கள் ஆலோசனை

நெய்வேலி, அக். 23:  நெய்வேலியில் வாக்குச்சாவடி திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நெய்வேலி சட்டமன்ற தொகுதி டவுன்ஷிப் வட்டம் 11, 12, 25, 26, 17, 18 ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஒருவர், 5 இளைஞர் அணியினர், 5 மகளிர் அணியினர் உள்பட ஒவ்வொரு குழுவிற்கும் நியமிக்கப்பட்டுள்ள 20 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி  தலைமை எடுத்திருக்கும் முடிவுகளை செயல்படுத்த வேண்டியது அவசியம் குறித்தும், அதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் ஆலோசனை
நடத்தப்பட்டது.

கூட்டத்தில் நகர செயலாளர் பக்கிரிசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள் நன்மாறபாண்டியன், செந்தில், நடராஜன், ராமகருப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், ஊராட்சி செயலாளர் சபா.பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Neyveli ,block ,DMU ,agents ,
× RELATED மகன் தூக்குபோட்டு தற்கொலை