×

வளையல்காரன்புதூர் பயணிகள் நிழற்குடையில் சிமென்ட் தளம் இருக்கை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

கரூர்,அக்.10: எந்தவித அடிப்படை வசதியும் இன்றி உள்ள நிழற்குடைக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் வீரராக்கியம் பகுதியை தாண்டியதும் வளையல்காரன்புதூர் பகுதிக்கான சாலை பிரிகிறது. இந்த பகுதியில் சாலையோரம் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டது. தரைத்தளம் போட்டு, மேற்கூரை மட்டுமே எழுப்பப்பட்ட நிலையில் மற்ற எந்த பணிகளும் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டுவிட்டது. இதனால், உட்கார இருக்கைகள் இன்றி மணல் பரப்பிய நிழற்குடையில், வெளியூர்களுக்கு செல்வதற்காக காத்திருக்கும் பயணிகள் அனைவரும் உட்கார்ந்து செல்லும் நிலைதான் இங்கு நிலவி வருகிறது. வளையல்காரன்புதூர் பகுதியில் இருந்து மாயனூர், குளித்தலை,

பெட்டவாய்த்தலை, லாலாப்பேட்டை, மகாதானபுரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அனைவரும் இங்கு நின்றுதான் ஏறிச் செல்கின்றனர். ஆனால், மழைக்காலத்திலும், வெயில் காலத்திலும் பாதுகாப்பாக நிற்க முடியாத நிலையில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சிமென்ட் தளம் அமைத்து, இருக்கைகள் வைக்கப்பட வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பாதியில் நிற்கும் இந்த நிழற்குடையை சீரமைத்து, புதுப்பித்து தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : bungalows ,bungalow ,
× RELATED கருங்குழி பேரூராட்சியில் ரூ.78 லட்சத்தில் தார் சாலை சீரமைப்பு