×

பூந்தமல்லி அருகே அரசுக்கு சொந்தமான ரூ.210 கோடி நிலம் மீட்பு

சென்னை: பூந்தமல்லி அரசுக்கு சொந்தமான ரூ.210 கோடி நிலம் மீட்கப்பட்டது. பூந்தமல்லி -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பூந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரம் பகுதியில் சுமார் 36 ஏக்கர் 23 சென்ட் நிலத்தை தனியார் நபர்கள் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தது அரசுக்கு தெரியவந்தது. இதுகுறித்து பெரும்புதூர் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்தபோது இந்த இடம் குறித்த உரிய ஆவணங்கள் அதனை வைத்திருந்தவர்களிடம் இல்லை. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு  சென்று, இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று கூறி அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைத்து நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட இடம் 36 ஏக்கர் 23 சென்ட் என்றும் அதன் மதிப்பு ரூ.210 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post பூந்தமல்லி அருகே அரசுக்கு சொந்தமான ரூ.210 கோடி நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Government ,Poondamalli ,Chennai ,Poonthamalli ,Bengaluru National Highway ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்