டெல்லி: நாடாளுமன்றத்தை பொதுமக்கள் நேரடியாக அணுகுவது என்பது முடியாத ஒன்று என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை நேரடியாக அணுகுவதை யாரும் அடிப்படை உரிமையாக கோர முடியாது. நாடாளுமன்றத்திற்கு வெளியே குரல் எழுப்பலாம், நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க மக்கள் நாடாளுமன்றத்தில் நேரில் மனு தரக்கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.