×

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் எதிர்கட்சி தலைவர்களுடன் சரத் பவார் இன்று ஆலோசனை

புதுடெல்லி: 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்  பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், சுதந்திரமான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்தல் நடத்துவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துல்லியமாக செயல்படுதல், அவற்றின் செயல் திறன் குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தேர்தல் ஆணையம் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Tags : Sharad Pawar ,Lok ,Sabha , Sharad Pawar will discuss next year's Lok Sabha election with opposition leaders today
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!