×

லண்டன் விழாவில் இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட ரயில் மாதிரிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்த மக்கள்

லண்டன்: லண்டன் விழாவில் காட்சி படுத்தப்பட்ட ரயில் மாதிரியைகளை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர். லண்டனின் அலெக்ஸாண்ட்ரா அரண்மனையில் ரயில் மாதிரிகண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் லண்டனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட ரயில்வே வழித்தட மாதிரிகள் காட்சிப்படுத்த பட்டிருந்தன.

வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடைய மாதிரிகளை மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் ஆர்வலர்கள் உருவாக்கி இருந்தது பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. ரயில்வே மாதிரிகளை தவிர்த்து தனியார் ஆர்வலர்கள் உருவாக்கிய மாதிரிகளும் இடம்பெற்றிருந்தன. ஆண்டு தோறும் லண்டனில் நடைபெறும் இந்த விழாவை மக்கள் குடும்பத்துடன் கண்டு கலிப்பதை அந்நாட்டு மக்கள் பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். 


Tags : London festival , London festival, more than 40 model trains, avid people to see and enjoy
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட 10 டன் கொகைன் பறிமுதல்