×

அவிநாசியில் முதல் முறையாக ரேக்ளா பந்தயம்: பல மாவட்டங்களில் இருந்து ரேக்ளா பந்தயம் வீரர்கள் தங்களது மாடுகள் மற்றும் வண்டிகளுடன் கலந்து கொண்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள ராயம்பாளையத்தில் அவிநாசி ரேக்ளா நண்பர்கள் மற்றும் இராயம்பாளையம் ஊர் பொதுமக்கள்  சார்பாக முதல்முறையாக ரேக்ளா பந்தயம் இன்று நடைபெறுகிறது. இந்த ரேக்ளா பந்தயத்தில் கலந்து கொண்ட மாடுகளை வீரர்கள் அதிவேகமாக ஓடச் செய்து இலக்கை அடைந்தனர். இந்த ரேக்ளா பந்தயத்திற்கு திருப்பூர், ஈரோடு, கோவை, திண்டுக்கல், தாராபுரம், பொள்ளாச்சி, மற்றும் காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட காளைகள்  பங்கேற்று போட்டி நடைபெற்றது.

 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என்று இரு பிரிவுகளில் நடக்கிறது. இப்பந்தயத்தில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட உள்ளது.  ரேக்ளா பந்தயம் நடைபெறும் சாலைகளில் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகம்பிகளுக்குப் பின்னால் கூடி ஆர்வமாக கண்டு களிக்கின்றனர்.

Tags : Rayclaw ,Avinasi , Avinasi, Rakla race, cows and cart
× RELATED நீர்வளத்துறை அலுவலகத்தில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு