×

ஆப்பிரிக்காவை சூறையாடிய சூறாவளி புயலால் இதுவரை 300 பேர் பலி

மலாவி: கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயல் தாக்கியதால், தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘தெற்கு மலாவியில் பெரு வெள்ளம் ஏற்படும். சூறாவளி புயலால் நேற்று பரவலாக பாதிப்பு ஏற்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளதாகவும், நூற்றுக் கணக்கானவர்களைக் காணவில்லை என்றும், தெற்கு மலாவியில் நிலைமை மோசமடைந்து உள்ளதாகவும், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

Tags : africa , 300 people have been killed so far due to the cyclone that ravaged Africa
× RELATED இந்தியாவின் எதிர்ப்புக்கு பதில்...