ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக், புல்வாமா, சோபியான் ஆகிய மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் பணியாளர்களுடன், தேசிய புலனாய்வு முகமையின் அதிரடிப்படையினர் அதிகாலை முதல் பல இடங்களில் பல குடியிருப்பு வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.